ரஞ்சி டிராபி அரையிறுதி: தமிழ்நாடு அணியில் இணையும் வாஷிங்டன் சுந்தர்


ரஞ்சி டிராபி அரையிறுதி:  தமிழ்நாடு அணியில் இணையும் வாஷிங்டன் சுந்தர்
x

மும்பை அணிக்கு எதிரான அரையிறுதியில் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.

சென்னை,

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிரதேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.

மும்பை அணிக்கு எதிரான அரையிறுதியில் தமிழ்நாட்டின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து விளையாடுகிறார் . அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்.


Next Story