ஆர்.சி.பி. பெண்கள் அணி வீராங்கனைகளுக்கு கவுரவம்


ஆர்.சி.பி. பெண்கள் அணி வீராங்கனைகளுக்கு கவுரவம்
x

image courtesy: twitter/@RCBTweets

2-வது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றிருந்த பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்று நிறைவடைந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணியை வீழ்த்தி ஆர்.சி.பி. கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் மகுடம் சூடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் கவுரவிக்கப்பட்டனர். மந்தனா கோப்பையுடன் மைதானத்திற்குள் நுழைந்தபோது இரு புறமும் பெங்களூரு அணி வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர்.

பின்னர் வீராங்கனைகள் மைதானத்தில் கோப்பையுடன் உற்சாகமாக வலம் வந்தனர். கர்நாடக பாடகரும், இசை அமைப்பாளருமான ரகு தீக்சித், நார்வே இசை புயல் ஆலன் வால்கர் தங்களது இசையால் ரசிகர்களை மகிழ்வித்தனர். விராட் கோலி, மேக்ஸ்வெல் உள்ளிட்ட பெங்களூரு அணி வீரர்களும் இதில் கலந்து கொண்டனர்.


Next Story