வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட அனுமதி மறுப்பு....பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகும் வீரர்கள் ?


வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட  அனுமதி மறுப்பு....பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகும்  வீரர்கள் ?
x

Image : AFP 

தினத்தந்தி 23 Jan 2024 4:38 PM GMT (Updated: 23 Jan 2024 5:00 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத் ,

உலகம் முழுதும் ஐபிஎல் போல பல்வேறு லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான், இலங்கை என டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், இந்த தொடர்களில் சென்று விளையாட பாகிஸ்தான் அணியில் சில வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான தங்களது மத்திய ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வது குறித்து சில முன்னணி வீரர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜமான் கான், பகார் ஜமான், முஹமது ஹரிஸ் ( மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள்) உள்ளிட்ட சில வீரர்களுக்கு வங்காளதேச பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்ததால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவில் இருப்பதால் , பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story