ரிஷப் பண்ட்-க்கு நடந்த அறுவை சிகிச்சை நிறைவு..!வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்


ரிஷப் பண்ட்-க்கு நடந்த அறுவை சிகிச்சை நிறைவு..!வெற்றிகரமாக முடிந்ததாக  தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2023 2:32 PM IST (Updated: 7 Jan 2023 2:38 PM IST)
t-max-icont-min-icon

ரிஷப் பண்ட்-க்கு முழங்காலில் மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவர் அதிகாலையில் சற்று கண் அசந்ததால் கார் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டது

அதன்படி ரிஷப் பண்ட்-க்கு முழங்காலில் நேற்று நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் எனவும் தகவல் வெளியாகியள்ளது.

1 More update

Next Story