பெங்களூருவுக்கு எதிரான நாளை போட்டியில் ரோகித், ஆர்சர் களமிறங்குவார்களா? - மும்பை பயிற்சியாளர் பதில்
பெங்களூரு - மும்பை இடையேயான முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.
பெங்களூரு,
நடப்பு ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் நாளையும் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்கிறது.
இதனிடையே, ஐபிஎல் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் நடந்த போட்டோ ஷூட்டின்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்றவில்லை. இதனால், அவர் பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பாரா? என்பதில் ரசிகர்கள் இடையே குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என்று மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல், முதல் போட்டியில் ஜோப்ரா ஆர்சரும் களமிறங்குவார் என்று மும்பை பயிற்சியாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ரோகித் சர்மா முழு உடல்தகுதியுடன் உள்ளார். அவர் கடந்த 2 நாட்களாக பயிற்சி எடுத்துள்ளார். போட்டிக்கு 100 சதவிகிதம் தயாராக உள்ளார். போட்டோ ஷூட் நடைபெற்ற போது அவருக்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் முன்னெச்சரிக்கையாக வீட்டிலேயே இருக்கும்படி கூறினோம் என்றார்.
பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் பங்கேற்பதையும் மும்பை பயிற்சியாளர் பவுச்சர் உறுதிசெய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாளைய போட்டிக்கு ஆர்ச்சர் 100 சதவிகிதம் தயாராக உள்லார். அவர் நாளைய போட்டியில் விளையாடுவார்' என்றார்.