பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட்: ரோகித் சர்மா அபார சதம்...!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
நாக்பூர்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 5 விக்கெட்டுகள் இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா சதம் விளாசினார். 171 பந்துகளில் ரோகித் சதம் விளாசினார்.
தற்போதைய நிலவரப்படி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ரோகித் சர்மா 102 ரன்களுடனும், ஜடேஜா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story