இந்திய கேப்டன்களில் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி காட்டிய ரோகித் சர்மா..!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா சதம் விளாசினார்
நாக்பூர்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.
இதில் நிலைத்து ஆடிய . இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா சதம் விளாசினார். 171 பந்துகளில் ரோகித் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்களில் வெளியேறினார்.
இந்த ஆட்டத்தில் அடித்த சதத்தால் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது கேப்டனாக டெஸ்ட் ,ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.
மேலும் . சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:
தில்சன் (இலங்கை) ,பாப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா), பாபர் அசாம் (பாகிஸ்தான்) ,ரோகித் சர்மா (இந்தியா).