சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு


சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு
x

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 2 வெற்றி (லக்னோ, மும்பைக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது. சென்னை போன்றே பெங்களூரு அணியும் 2 வெற்றி (மும்பை, டெல்லிக்கு எதிராக) 2 தோல்விகளுடன் (கொல்கத்தா, லக்னோவுக்கு எதிராக) 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா, மதீஷா பதிரானா.

பெங்களூரு: கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, வெய்ன் பர்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.


Next Story