எஸ்.ஏ.20 ஓவர் லீக்; இறுதி போட்டியில் சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஈஸ்டர்ன் கேப் இன்று மோதல்

image courtesy; twitter/@SA20_League
கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
ஜோகன்ஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் கேஷவ் மகராஜ் தலைமையிலான டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்சும், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் இந்த தொடரில் மகுடம் சூடப்போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்டஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Related Tags :
Next Story






