எஸ்.ஏ.20 ஓவர் லீக்; சூப்பர் கிங்ஸ் அபார பந்துவீச்சு - பார்ல் ராயல்ஸ் 138 ரன்களில் ஆல் அவுட்


எஸ்.ஏ.20 ஓவர் லீக்; சூப்பர் கிங்ஸ் அபார பந்துவீச்சு - பார்ல் ராயல்ஸ் 138 ரன்களில் ஆல் அவுட்
x

Image Courtesy: @JSKSA20

சூப்பர் கிங்ஸ் தரப்பில் சாம் குக் 4 விக்கெட், நந்த்ரே பர்கர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெய்ன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் டர்பன் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த டர்பன் அணி 2வது குவாலிபையர் ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பார்ல் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பட்லர் 10 ரன், ராய் 24 ரன் அடுத்து களம் இறங்கிய மிட்செல் வான் ப்யூரன் 0 ரன், டேன் விலாஸ் 21 ரன், விஹான் லுபே 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய மில்லர் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ராயல்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 8 ரன், ஜோர்ன் பார்டுயின் 0 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டேவிட் மில்லர் 47 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் சாம் குக் 4 விக்கெட், நந்த்ரே பர்கர் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 139 ரன் எடுத்தால் 2வது குவாலிபையர் ஆட்டத்திற்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் சூப்பர் கிங்ஸ் அணி ஆட உள்ளது.


Next Story