யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்


யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்
x

உடலுக்கும் மனதுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க யோகா உதவுகிறது என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

மும்பை,

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் யோகா செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உடலுக்கும் மனதுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க யோகா உதவுகிறது. உங்களுக்கு பிடித்த யோகா ஆசனம் எது?" என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான யோகா ஆசனங்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.




Next Story