இம்முறை டி20 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது - பும்ரா


இம்முறை டி20 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது - பும்ரா
x
தினத்தந்தி 4 Oct 2022 9:45 AM GMT (Updated: 4 Oct 2022 9:48 AM GMT)

இம்முறை டி20 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது என்று ஜஸ்பிரீத் பும்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகுவலி காயம் காரணமாக விலகியதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு விலக்கியுள்ளது. விரிவான மதிப்பீடு மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"காயம் காரணமாக இம்முறை டி20 உலக கோப்பை போட்டிகளில் நான் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது. உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. உடல்நிலை சீரானதும் இந்திய அணிக்கு என்னுடைய ஆதரவை அளிப்பேன்." என்று பதிவிட்டுள்ளார்.


Next Story