பள்ளி கிரிக்கெட் போட்டி: நெல்லையில் இன்று தொடக்கம்
பள்ளி அணிகளுக்கான 2-வது கட்ட டி20 சாம்பியன்ஷிப் போட்டி நெல்லையில் இன்று தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.
நெல்லை,
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில் பள்ளி அணிகளுக்கான 2-வது கட்ட 20 ஓவர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நெல்லையில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் முதற்கட்ட போட்டியில் சென்னையில் இருந்து டாப்-2 இடம் பிடித்த அணிகள், மற்ற மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அணிகள் என்று மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் (சென்னை), ஹோலி கிராஸ் (சேலம்), எஸ்.ஐ.ஜி.ஏ. (விழுப்புரம்), குட் ஷெப்பர்டு (கன்னியாகுமரி), 'பி' பிரிவில் ராமச்சந்திரா (சென்னை), ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (கோவை), வித்யா பீடம் (வேலூர்) கிரேஸ் (மதுரை) ஆகிய அணிகள் இடம் பெற்று மோதுகின்றன. தொடக்க நாளில் 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
Related Tags :
Next Story