ஆசிய கோப்பை தொடரில் ஷாஹீன் அப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு - இன்சமாம்-உல்-ஹக்


ஆசிய கோப்பை தொடரில் ஷாஹீன் அப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு - இன்சமாம்-உல்-ஹக்
x

ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஷாஹீன் அப்ரிடி விலகி உள்ளார்.

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்த விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் ஷாஹீன் அப்ரிடி விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு மாற்று வீரரை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதன்படி, ஷாஹீன் அப்ரிடிக்கு பதிலாக 22 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பாகிஸ்தான் அணியில் சேர்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி ஆடாதது அணிக்கு பெரும் பின்னடைவு என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஷாஹீன் அப்ரிடி விலகியிருப்பது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு. இந்தியா பாகிஸ்தான் மோதிய கடந்த டி-20 உலக கோப்பையில் அவர் முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவர் இல்லாதது அணிக்கு பெரும் சறுக்கல் எனக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story