ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பைக்கான வங்காளதேச அணி கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்

image courtesy: AFP
https://www.dailythanthi.com/Sports/Cricket/2022/03/10001712/Shakib-Al-Hasan-retires-from-all-forms-of-international.vpf
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டாக்கா,
ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஷகிப் அல் ஹசன் வரவிருக்கும் ஆசியக் கோப்பையில் வங்காளதேச அணியை வழிநடத்துவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரையும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பையையும் அணியை வழிநடத்த உள்ளார்.
ஆசிய கோப்பைக்கான வங்காளதேச அணி: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அனாமுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், அபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், முகமது சைபுதீன், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது, சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமன், நூருல் ஹசன் சோஹன் மற்றும் தஸ்கின் அகமது.






