கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம்...புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்...!


கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம்...புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்...!
x

Image Courtesy: AFP

கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான் அரைசதம் அடித்தார்.

கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பஞ்சாப் தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்ததன் மூலம் தவான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்களை பதிவு செய்த 3 வீரராக ஷிகர் தவான் மாறியுள்ளார். 50 அரைசதங்களை பதிவு செய்த 2வது இந்திய வீரராக தவான் சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் டேவிட் வார்னரும், 2வது இடத்தில் இந்திய வீரர் விராட் கோலியும், 3வது இடத்தில் ஷிகர் தவானும் உள்ளனர்.

1 More update

Next Story