ஷ்ரேயாஸ் ஐயருக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை..! உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி


ஷ்ரேயாஸ் ஐயருக்கு வெற்றிகரமாக முடிந்த  அறுவை சிகிச்சை..!   உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி
x

உலகக் கோப்பை தொடரில் கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் , முதுகுப்பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே காயம் காரணமாக அவர் விளையாட வரவில்லை. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. .முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார்.

இந்த நிலையில் தான் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. எனினும், வரும் அகடோபர் மாதம் தொடங்க இருக்கும் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடரில் கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4-ம் வரிசைக்கான முதன்மை வீரர்.



Next Story