வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு...?


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு...?
x

Image Courtesy: @ICC

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

புதுடெல்லி,

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வி இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாமிபியன்ஷிப் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி தொடங்க உள்ளது. இதற்காக வரும் ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜூலை 12-ந் தேதி முதல் 16-ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 20-24 ம் தேதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. ஜூலை 27, 29, ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் ( டெஸ்ட் தொடர் அல்லது வெள்ளைப்பந்து தொடர்) இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படலாம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் அவர் ஓய்வு எடுக்க அறிவுத்தப்படலாம் எனவும் தகவல்கல் வெளியாகி உள்ளன.


Next Story