பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து


பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து
x

Image Courtesy: PTI 

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று (அக்.,18) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்துவந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புதிய பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி (67 வயது) இன்று தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா மீண்டும் தேர்வானார். மற்ற சில நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக பதிவி வகித்த ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

1983 உலககோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரோஜர் பின்னி. அந்த தொடரில் ரோஜர் பின்னி 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார். இதே போன்று 1985ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் சீரியஸில் ரோஜர் பின்னி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னி-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " ரோஜர் பின்னிக்கு எனது வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது. பிசிசிஐ-யின் புதிய குழு இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்லும். எனவே அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.


Next Story