சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் ஓய்வு!


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் ஓய்வு!
x

image courtesy; AFP

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாட இருப்பதாக டி காக் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டி காக்(30) இந்த உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டமே அவரது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் அவர் 3 ரன்களில், வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடப்பு உலகக்கோப்பையில் டி காக் 10 ஆட்டங்களில் விளையாடி 4 சதம் உள்பட 594 ரன்கள் அடித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 20 பேரை ஆட்டமிழக்க செய்திருக்கிறார். ஆனால் முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்து விட்டார்.

அவர் இதுவரை மொத்தம் 155 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 21 சதம், 30 அரைசதம் உள்பட 6,770 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாட இருப்பதாக டி காக் கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story