ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு - காயம் காரணமாக முன்னணி வீரர்கள் விலகல்...!


ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு - காயம் காரணமாக முன்னணி வீரர்கள் விலகல்...!
x

Image Courtesy: @ICC

நாளை பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. நாளை பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தனது ஆட்டங்களை இலங்கையில் ஆடுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா, துஷ்மந்த சமீரா, லஹிரு மதுஷங்கா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற மகேஷ் தீக்சனா, மதீஷா பதிரானா ஆகியோர் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:-

தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லாகலே, மதீஷா பதிரானா, கசுன் ரஜிதா, துஷான் ஹேமந்தா, பினுரு பெர்ணாண்டோ, பிரமோத் மதுஷான்.



1 More update

Next Story