இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா காயத்தால் அவதி - ஆசிய கோப்பை போட்டியில் ஆடுவது சந்தேகம்


இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா காயத்தால் அவதி - ஆசிய கோப்பை போட்டியில் ஆடுவது சந்தேகம்
x

கோப்புப்படம் 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.

கொழும்பு,

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

சமீபத்தில் லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது. இதே போல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் சமீரா ஆசிய போட்டியை முழுமையாக தவறவிட வாய்ப்புள்ளது.

பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வேகமாக குணமடைவதை பொறுத்து அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும். இது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 31-ந்தேதி வங்காளதேசத்தை பல்லகெலேவில் சந்திக்கிறது.

1 More update

Next Story