"சர்ச்சை உருவாக்குவதை நிறுத்துங்கள்" - சுனில் கவாஸ்கர்


சர்ச்சை உருவாக்குவதை நிறுத்துங்கள் -  சுனில் கவாஸ்கர்
x

image courtesy; AFP

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

புது டெல்லி,

ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் கில், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பும்ரா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரும் சஞ்சு சாம்சன் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் சாஹல் இடம் பெறாதது குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அதில்,

நிச்சயமாக சில வீரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக அணியில் இடம் பிடித்துள்ளனர். எனினும் அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டது. எனவே அஸ்வினை பற்றி பேச வேண்டாம். சர்ச்சை உருவாக்குவதை நிறுத்துங்கள். இதுதான் இப்போது இந்திய அணி. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், போட்டிகளைப் பார்க்காதீர்கள். ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது வேறொருவர் இருக்க வேண்டும் என்று சொல்வதை நிறுத்துங்கள், இது தவறான எண்ணம்" என்று கூறினார்.

மேலும் சாஹல் மற்றும் சாம்சன் குறித்து பேசுகையில்,

சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிக ரன்கள் எடுத்திருந்தால் மாற்று வீரராக இல்லாமல் ஆசிய கோப்பை அணியில் இடம்பிடித்து இருப்பார். சாஹல் விஷயத்தில் அவர் பந்து வீச்சை தவிர பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் அவரால் என்ன செய்ய முடியும். ஆனால் சாஹலை விட குல்தீப் யாதவ் அதிகமாக பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர் என்பதால் அணியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழு இதை போன்று பல்வேறு அம்சங்களைப் ஆராய்ந்து அணியை தேர்வு செய்துள்ளது என கூறினார்.

இந்தியா தனது ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.


Next Story