சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆட வேண்டும் - தந்தை விருப்பம்


சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆட வேண்டும் - தந்தை விருப்பம்
x

Image Courtesy: AFP

ஓய்வறையில் நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது நெருக்கடிதான் ஏற்படும்.

தர்மசாலா,

தர்மசாலாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் பஞ்சாப்பை சேர்ந்த இந்திய இளம் வீரர் சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வந்த சுப்மன் கில், ஜெய்ஸ்வாலின் வருகைக்கு பிறகு தானாகவே 3-வது வரிசையை கேட்டு பெற்றார்.

இந்நிலையில் நேற்று சுப்மன் கில்லின் ஆட்டத்தை நேரில் ரசித்த அவரது தந்தை லாக்விந்தர்சிங் கூறுகையில், கில் தொடர்ந்து தொடக்க வரிசையில் விளையாடி இருக்க வேண்டும். 3-வது வரிசை அவருக்கு பொருத்தமானது கிடையாது என்று நினைக்கிறேன். ஓய்வறையில் நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது நெருக்கடிதான் ஏற்படும்.

பேட்டிங்கில் நம்பர்-3 என்பது தொடக்க வரிசை அல்லது மிடில் வரிசைபோல் அல்ல. அது மட்டுமின்றி அவரது ஆட்ட அணுகுமுறையும் இதற்கு ஒத்துவராது. புஜாரா போன்று தடுப்பாட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தும் வீரர்களுக்கே இது சரியானதாக இருக்கும் என்றாலும் சுப்மன் கில்லின் முடிவில் நான் தலையிடுவதில்லை. முடிவு எடுக்கும் அளவுக்கு போதுமான அனுபவம் அவரிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story