சன்னி சந்து அரைசதம்; திருப்பூருக்கு எதிராக சேலம் 155 ரன்கள் சேர்ப்பு...!
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
திருநெல்வேலி,
8 அணிகள் இடையிலான 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக அரவிந்த் 1 ரன், கெளஷிக் காந்தி 0 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய சன்னி சந்து ஒரு முனையில் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் கவின் 19 ரன், மோஹித் ஹரிஹரன் 3 ரன், அபிஷேக் 10 ரன், அட்னான் கான் 15 ரன், கேப்டன் அபிஷேக் தன்வர் 17 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ரன்களே எடுத்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து 61 ரன்கள் எடுத்தார். திருப்பூர் அணி தரப்பில் புவனேஷ்வரன் 3 விக்கெட்டும், திரிலோக் நாக், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி ஆட உள்ளது.