என்னுடைய இயல்பான விளையாட்டை விளையாட வேண்டும் என்று சூர்யகுமார் யாதவ் கூறினார் - இஷான் கிஷன்


என்னுடைய இயல்பான விளையாட்டை விளையாட வேண்டும் என்று சூர்யகுமார் யாதவ் கூறினார் - இஷான் கிஷன்
x

image courtesy; twitter/ @BCCI

நேற்று நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம்,

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா அணி இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின்போது ஒரு கட்டத்தில் இந்திய அணி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த வேளையில் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணி வெற்றி பெற உதவினர்.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில்;- 'முதலில் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறேன். அதிலும் முகேஷ் குமார் இறுதி கட்டத்தில் மிகச்சிறப்பாக பந்துவீசி சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த மைதானத்தில் பந்து வீசுவது அவ்வளவு எளிதானது இல்லை என்றாலும் அவர் அற்புதமாகவே செயல்பட்டார். ரிங்கு சிங் சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே அவர் இப்படி விளையாடுவது ஆச்சரியப்பட வைக்கிறது.

22 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்தபோது நானும் சூர்யாவும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அப்போது சூரியகுமார் யாதவ் என்னிடம் வந்து கூறியது ஒரே ஒரு விஷயம்தான். பின்னால் வரும் வீரர்களுக்கு நாம் நிறைய ரன்களை மீதம் வைத்து அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. உன்னுடைய இயல்பான விளையாட்டை நீ விளையாட வேண்டும் என்று என்னிடம் கூறினார்.

அதோடு எப்போதெல்லாம் பெரிய ஷார்ட் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவரே அதனை விளையாடினார். மேலும் எங்களது பார்ட்னர்ஷிப்பில் விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஒருவேளை நான் ஆட்டம் இழந்தாலும் விரைவாக நிறைய ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க வேண்டும் என்று நினைத்தேன். இளம் வீரர்களைக் கொண்ட எங்கள் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு இவ்வளவு பெரிய அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி' என்று கூறினார்.



Next Story