ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: புது கேப்டன் தலைமையில் களம் இறங்கும் பாகிஸ்தான்...!


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: புது கேப்டன் தலைமையில் களம் இறங்கும் பாகிஸ்தான்...!
x

கோப்புப்படம்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது.

கராச்சி,

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 25ம் தேதி ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. 3 டி20 போட்டிகளும் ஷார்ஜாவிலே நடைபெறுகின்றன.

இந்த டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான பாகிஸ்தானின் வழக்கமான கேப்டன் பாபர் ஆசம் வழிநடத்தவில்லை. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் அணியின் தலை பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் முன்னணி சீனியர் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஓய்வு அளித்துள்ளது. பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ராப், ஷாகின் ஷா அப்ரிடி, பக்கார் ஜமான் போன்ற சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி20 உலககோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் கூட தங்களை நிரூபிக்க தவறியது. இதனால் பாபர் ஆசமின் தலைமை பண்பின் மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன.

தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பாபர் ஆசமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை டி20 அணிக்கு புதிய கேப்டனை நிர்ணயிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதா ? என ரசிகர்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:

ஷதாப் கான் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், ஆசம் கான், பஹீம் அஷ்ரப், இப்திகார் அகமது, இஹ்ஸானுல்லாஹ், இமாத் வாசிம், முகமது ஹரீஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஜமான் கான், தயப் தாஹிர், ஷான் மசூத், சைம் அயூப்.



Next Story