ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...இந்த இந்திய வீரர் பங்கேற்பதில் சிக்கல்..!


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...இந்த இந்திய வீரர் பங்கேற்பதில் சிக்கல்..!
x

Image Courtesy: AFP

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின்போது வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த பாண்ட்யா அதன் பின்னர் எந்த வித கிரிக்கெட்டும் ஆடாமல் ஓய்வில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடருக்கு முன் அவர் குணமடைந்து விடுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story