இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!


இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!
x

image courtesy; ICC

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

மும்பை,

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விவரம் பின்வருமாறு;-

மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா


Next Story