பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு


பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
x

Image: AFP

தினத்தந்தி 3 Jan 2024 2:01 PM IST (Updated: 3 Jan 2024 2:03 PM IST)
t-max-icont-min-icon

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது

வெலிங்டன்,

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வரும் 12 ஆம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரை தவற விட்ட வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்ரி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

மேலும் வங்காளதேச அணிக்கு எதிரான தொடரை தவறவிட்ட கேன் வில்லியம்சன் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கேப்டன் ), பின் ஆலன், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன் , டெவான் கான்வே , லாக்கி பெர்குசன், மேட் ஹென்ரி, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ் , டிம் சீபர்ட் , இஷ் சோதி, டிம் சவுதி.


Next Story