வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது


வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
x

image courtesy: BCCIWomen twitter

இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.

மிர்புர்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் 114 ரன்களில் வங்காளதேசத்தை கட்டுப்படுத்திய இந்திய அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழக்காமல் 54 ரன்னும், ஸ்மிர்தி மந்தனா 38 ரன்னும் விளாசினர். தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்திய அணி தனது ஆதிக்கத்தை நீட்டித்து தொடரை வெல்ல தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க வங்காளதேச அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story