உலகக் கோப்பை டி20 தொடர்: நிதின் மேனன் உட்பட 16 நடுவர்களை நியமித்தது ஐசிசி


உலகக் கோப்பை டி20 தொடர்: நிதின் மேனன் உட்பட 16 நடுவர்களை நியமித்தது ஐசிசி
x

Image Courtesy: AFP 

ஐசிசி மொத்தம் நியமித்துள்ள 16 நடுவர்களின் ஒரே ஒரு இந்திய நடுவராக நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார்.

துபாய்,

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்களை, போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான நடுவர்களை ஐசிசி இன்று நியமித்துள்ளது. ஐசிசி மொத்தம் நியமித்துள்ள 16 நடுவர்களின் ஒரே ஒரு இந்திய நடுவராக நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். இவரை தவிர ரிச்சர்ட் கெட்டில்பரோக், குமார் தர்மசேனா மற்றும் மரைஸ் எராஸ்மஸ் போன்ற பிரபல நடுவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்காக நியமிக்கப்பட்டுள்ள நடுவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், அலீம் டார், அஹ்சன் ராசா, கிறிஸ்டோபர் பிரவுன், கிறிஸ்டோபர் கஃபனே, ஜோயல் வில்சன், குமார தர்மசேன, லாங்டன் ருசேரே, மரைஸ் எராஸ்மஸ், மைக்கேல் கோஃப், நிதின் மேனன், பால் ரீஃபெல், பால் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோக், ரிச்சர்ட் கெட்டில்பரோக்.


Next Story