மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா - ஆஸி. இடையேயான ஆட்டம் மீண்டும் தொடக்கம்: ஓவர்கள் குறைப்பு


மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா - ஆஸி. இடையேயான ஆட்டம் மீண்டும் தொடக்கம்: ஓவர்கள் குறைப்பு
x

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரர் மேதிவ் ஷாட் 9 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆஸ்திரேலியா 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மழை தற்போது நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. 1 மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு 33 ஓவரில் 317 ரன்கள் இலக்கு நிர்யணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 11 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா வெற்றிபெற 22 ஓவரில் இன்னும் 248 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா வெற்றிபெற இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.


Next Story