தெ.ஆ.வுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஒரு வீரரை மட்டும் குறை சொல்லக்கூடாது.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு


தெ.ஆ.வுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஒரு வீரரை மட்டும் குறை சொல்லக்கூடாது.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு
x

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.

மும்பை,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. இதில் முதல் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2வது ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை பறித்தது.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததால் அணி தோல்வியை சந்தித்தது. மேலும், பிரசித் கிருஷ்ணா மற்றும் தாக்கூர் இருவரும் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கினர். மொத்தத்தில் இந்த தொடரில் ராகுல் மற்றும் கோலியை தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடரில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக செயல்படாததால் ஸ்ரேயாஸ் ஐயரை மட்டும் விமர்சித்து நீக்குவது சரியாக இருக்காது என்றும் அடுத்ததாக நடைபெறும் தொடர்களில் அவரை (ஸ்ரேயஸ் ஐயர்) நீக்கி விடாதீர்கள் எனவும் இந்திய முன்னாள் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் தடுமாறவில்லை. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இது போன்ற பிட்ச்களில் உலகின் எந்த பேட்ஸ்மேன்களும் தடுமாறுவார்கள். சொல்லப்போனால் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலை தவிர்த்து இந்த தொடரில் யாருமே பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை.

எனவே ஒருவர் மீது மட்டும் நீங்கள் கை விரலை காட்டி விமர்சிக்க முடியாது. அதனால் அவருக்கு தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story