தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 251 ரன்னில் ஆல்-அவுட்
தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது.
செஞ்சூரியன்,
தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளான நேற்று எஞ்சிய 3 விக்கெட்டையும் இழந்து தென்ஆப்பிரிக்கா 320 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 79.3 ஓவர்களில் 251 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 81 ரன்கள் (117 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
69 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
Related Tags :
Next Story