இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
புதுடெல்லி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை (புதன்கிழமை) காலை 9:30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது. 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா தொடரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.
மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் கவாஸ்கர் பார்டர் கிரிக்கெட் கோப்பையை மீண்டும் தக்கவைப்பதுடன் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெரும். எனவே வெற்றியை பதிவு செய்ய இந்திய வீரர்கள் ஆயுத்தமாகி வருகின்றனர். அதே வேளையில் தொடர் தோல்வியிலிருந்து மீள்வதுடன் நடப்பு தொடரையும் மோசமாக இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணியினரும் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய டெஸ்ட்டில் களமிறங்க உள்ளது.