இந்திய ஜோடியின் 12 ஆண்டு கால சாதனையை முறியடித்த கான்வே - மிட்செல் ஜோடி


இந்திய ஜோடியின் 12 ஆண்டு கால சாதனையை முறியடித்த கான்வே - மிட்செல் ஜோடி
x

Image Courtesy: @ICC

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

கார்டிப்,

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கார்டிப் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

அதை தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. 45.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 297 ரன்களை எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு டேவோன் கான்வே - மிட்சேல் ஜோடி முக்கிய பங்காற்றியது. அந்த ஜோடி அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தது. கான்வே 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 111* ரன்கள் விளாசி அசத்தினார். மிட்சேல் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 118* ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 180* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம் கான்வே-மிட்செல் ஜோடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது, கான்வே - மிட்சேல் ஜோடி இப்போட்டி நடைபெற்ற கார்டிப் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ராகுல் டிராவிட் - விராட் கோலியின் 12 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது.

அந்த பட்டியலில்,

1. டேவோன் கான்வே – டார்ல் மிட்சேல் : 180*, 2023

2. ராகுல் டிராவிட் – விராட் கோலி : 170, 2011

3. சர்ப்ராஸ் கான் – சோயப் மாலிக் : 163, 2016

4. எம்எஸ் தோனி – சுரேஷ் ரெய்னா : 144, 2014


Next Story