"நடப்பு சீசன் நமக்கு ஏமாற்றமே" - மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் நீடா அம்பானி பேச்சு


நடப்பு சீசன் நமக்கு ஏமாற்றமே - மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் நீடா அம்பானி பேச்சு
x

Image Grab On Video Posted By @mipaltan

நம் அனைவருக்கும் இந்த சீசன் ஏமாற்றமாக அமைந்தது, நாம் எதிர்பார்த்தது கைகூடாமல் போனது என நீடா அம்பானி பேசினார்.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19ம் தேதியுடன் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி 14 ஆட்டங்களில் வெறும் 4 வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடனான போட்டிக்கு பிறகு மும்பை அணி வீரர்களை நீடா அம்பானி சந்தித்துள்ளார். அப்போது அவர் வீரர்களிடம் பேசுகையில் கூறியதாவது,

நம் அனைவருக்கும் இந்த சீசன் ஏமாற்றமாக அமைந்தது. நாம் எதிர்பார்த்தது கைகூடாமல் போனது. நான் அணியின் உரிமையாளர் மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகையும் கூட. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிவது பாக்கியம். இந்த சீசன் குறித்து நாம் எல்லோரும் கூடி பேசுவோம். அதுகுறித்து ரிவ்யூ செய்வோம் என்றார்.

மேலும், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ராவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.



Next Story