உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை - தீப்தி சர்மா


உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை - தீப்தி சர்மா
x

Image Courtesy: AFP 

இந்தியா உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.

சில்ஹெட்,

8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்று 7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.

7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், ஆசிய கோப்பை வெற்றி குறித்து தீப்தி ஷர்மா கூறுகையில், அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் ஆசிய கோப்பையை வெல்ல முடிந்தது. தற்போதைய நிலையில் இந்தியா உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என தெரிவித்தார்.

1 More update

Next Story