இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட்...மழையால் ஆட்டம் பாதிப்பு..!


இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட்...மழையால் ஆட்டம் பாதிப்பு..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 Dec 2023 8:13 PM IST (Updated: 26 Dec 2023 8:50 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது.

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது.

அதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், அடுத்து களம் இறங்கிய சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், அஸ்வின் 8 ரன், ஷர்துல் 24 ரன், பும்ரா 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய தரப்பில் ராகுல் 70 ரன், சிராஜ் 0 ரன் எடுத்துள்ள நிலையில் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story