'நாயகன் மீண்டும் வரார்'; இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்


நாயகன் மீண்டும் வரார்; இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்
x

instagram courtesy; instagram/stokesy

தினத்தந்தி 16 Aug 2023 10:18 AM GMT (Updated: 16 Aug 2023 10:29 AM GMT)

ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை மாற்றி அணிக்கு திரும்புகிறார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

லண்டன்,

ஒருநாள் போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றார். எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுமாறு பென் ஸ்டோக்சிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் பயிற்சியாளர் மேத்யூ மோட்டும், ஸ்டோக்ஸ் திரும்பி வருவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு முடிவில் இருந்து அணிக்கு திரும்பி இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து கடந்த முறை கோப்பையை வெல்வதில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இதனால் அவரது வருகை அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

ஓய்வுக்கு பின் அவரது முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளார். ஸ்டோக்ஸ் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,924 ரன்களும் 74 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.


Next Story