ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்...ஷிகர் தவான் ஆடாதது ஏன்...? - சாம் கர்ரன் விளக்கம்


ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்...ஷிகர் தவான் ஆடாதது ஏன்...? -   சாம் கர்ரன் விளக்கம்
x

Image Courtesy: Twitter 

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கர்ரன் செயல்பட உள்ளார்.

முல்லன்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முல்லன்பூரில் நடைபெற்று வரும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்படும் போது பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கர்ரன் மைதானத்திற்குள் வந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் ஏன் ஆட வில்லை என சாம் கர்ரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டாஸ் போடும் போது அவர் கூறியதாவது, தவான் சிறிய அளவில் காயத்தை சந்தித்துள்ளதால் அவர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறவில்லை. அதனால் தான் நான் இங்கு நிற்கிறேன். நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்தோம். ஆனால் தற்போது நாங்கள் ரன்களை பலகையில் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
  • chat