ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி 167 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி
Published on

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினர்.

முடிவில் வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.

முன்னதாக இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவரும் இணைந்து வெறும் 30 பந்துகளிலேயே செஞ்சுரி (100 ரன்கள்) பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த பந்துகளில் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற மாபெரும் சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். இந்த பட்டியலில் முதல் 2 இடங்களிலுமே இந்த ஜோடிதான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த பட்டியல்:-

1. டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா - 30 பந்துகள்

2. டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா - 34 பந்துகள்

3. ஹர்பஜன் சிங் - சுசித்/கிறிஸ் லின் - சுனில் நரைன் - 46 பந்துகள்

X

Daily Thanthi
www.dailythanthi.com