தற்போது உலக கிரிக்கெட்டில் அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை - சிஎஸ்கே வீரரை புகழ்ந்த ஹர்பஜன் சிங்...!
தற்போது உலக கிரிக்கெட்டில் அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை என சிஎஸ்கே வீரரை ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத்,
16வது ஐபிஎல் சீசன் இன்னும் சில மணி நேரங்களில் அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்தியாவுன் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் தோனிக்கு இந்த ஐபிஎல் தொடர் கடைசி தொடராக இருக்க வாய்ப்பு உள்ளதால் அவரை வெற்றியுடன் வழி அனுப்ப அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், தற்போதைய உலக கிரிக்கெட்டில் இந்த வீரரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை என சிஎஸ்கே வீரரை குறிப்பிட்டு ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
ரவீந்திர ஜடேஜா மட்டுமே என் பார்வையில் இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக அவர் எப்படிப்பட்ட பேட்டிங் செய்ய உள்ளார் என்பதை நாம் பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை அவர் பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டரில் வருவார் என நினைக்கிறேன்.
அதே போல் அவரது நான்கு ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும். தற்போதை உலக கிரிக்கெட்டை பார்க்கையில், அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை. எனவேரவீந்திர ஜடேஜா ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.