இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் 5 பிளேயர்ஸ் இவங்கதான் - மொயீன் அலி தேர்வு செய்த வீரர்கள்..!


இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் 5 பிளேயர்ஸ் இவங்கதான் - மொயீன் அலி தேர்வு செய்த வீரர்கள்..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 Jan 2024 4:27 AM GMT (Updated: 10 Jan 2024 5:11 AM GMT)

மொயீன் அலி ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வருகிறார்.

துபாய்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மொயீன் அலி. இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒருநாள் போட்டிகள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் தொடரிலும் 2018-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வருகிறார். அதுமட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் டி10 மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு நேர்காணல் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஆல்டைம் பெஸ்ட் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

அவர் தேர்வு செய்த 5 வீரர்கள் யாரெனில் 5வது இடத்தில் 2011 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங்கை தேர்வு செய்துள்ளார். 4வது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான விரேந்தர் சேவாக்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து 3வது இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும், 2வது இடத்தில் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியையும், முதல் இடத்தில் இந்தியாவுக்காக ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியையும் தேர்வு செய்துள்ளார்.


Next Story