இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை - நியூசிலாந்து முன்னணி வீரர் அதிரடி அறிவிப்பு


இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை - நியூசிலாந்து முன்னணி வீரர் அதிரடி அறிவிப்பு
x

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரே தனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் என்று நியூசிலாந்து முன்னணி வீரர் அறிவித்துள்ளார்.

வெலிங்டன்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.

இதனையடுத்து நியூசிலாந்து 3-வது ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் உகாண்டா அணியை 40 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து இலக்கை வெறும் 5.2 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சவுதி 3 விக்கெட்டுகளும், போல்ட், சாண்ட்னர் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின் அளித்த பேட்டியில் நியூசிலாந்து முன்னணி வீரரான டிரெண்ட் போல்ட் இதுவே தனது கடைசி டி20 உலகக்கோப்பை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் எதிர் வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டமே டிரெண்ட் போல்ட்டின் கெரியரில் கடைசி டி20 உலகக்கோப்பை போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள போல்ட் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு தொடரிலும் நியூசிலாந்து அணி தரப்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

1 More update

Next Story