2023 உலகக்கோப்பை தொடருக்கு இந்த வீரர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார் - தினேஷ் கார்த்திக்


2023 உலகக்கோப்பை தொடருக்கு இந்த வீரர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார் - தினேஷ் கார்த்திக்
x

2023 உலகக்கோப்பை தொடருக்கு இந்த வீரர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால் இந்திய அணி தனது பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் கேப்டன் ரோகித் சர்மா குழப்பத்தில் இருப்பார். தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் அல்லது ராகுல் ஆகியோர் களம் இறங்குவர்.

3வது வரிசையில் கோலி இறங்குவார். மிடில் ஆர்டரை பொறுத்தவரை இந்திய அணியில் ஏராளமான வீரர்கள் இடத்தை உறுதி செய்ய கடுமையாக போராடுகின்றனர். ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடையே 4வது மற்றும் 5வது வரிசையில் களம் இறங்க கடுமையாக போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் 5வது வரிசையில் ஆட இந்த வீரர் தான் சரியாக இருப்பார் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருப்பார். 5வது வரிசையில் ஆட இந்திய அணி இன்னும் வீரரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. அந்த இடத்துக்கு ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் இடையே கடுமையாக போட்டி இருக்கும் என நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை ராகுல் அந்த இடத்தில் ஆடுவார் என நினைக்கிறேன். 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ராகுல் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story