உலகக்கோப்பையை இந்த அணி வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளது - இயான் மோர்கன்


உலகக்கோப்பையை இந்த அணி வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளது - இயான் மோர்கன்
x

Image Courtesy : AFP

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஒவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

லண்டன்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரை யார் வெல்வார்கள், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த முறை உலகக்கோபையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இங்கிலாந்து அணி ஒரு நல்ல அணிதான் இருந்தாலும் என்னை பொறுத்தவரை இந்தியாவிற்கு அடுத்துதான் இங்கிலாந்து அணியை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் 2011-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோன்று 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றது. அதேபோன்று 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

எனவே 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் உலககோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்திய அணியே கோப்பையை வெல்ல அதிகமாக உள்ளதாக நான் கருதுகிறேன். அதேபோன்று இந்திய அணிக்கு அடுத்து இங்கிலாந்து அணி இந்த கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகள் குறித்து கேட்டால், இந்தியா, இங்கிலாந்து அணியுடன் சேர்த்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story