சேப்பாக்கத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை


சேப்பாக்கத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை
x

சென்னை- கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில்மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்று திறனாளிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story