டி20 உலகக்கோப்பையில் டிம் டேவிட் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும்: கில்கிறிஸ்ட்


டி20 உலகக்கோப்பையில் டிம் டேவிட் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும்: கில்கிறிஸ்ட்
x

கோப்புப்படம் 

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரின் 3-வது ஆட்டத்தில் டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன் எடுத்து அசத்தினார்.

மெல்போர்ன்,

20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் இடம் பெற்று உள்ளார். சிங்கப்பூரில் பிறந்த அவர் அந்த நாட்டு அணிக்காக விளையாடி வந்தார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாடிய அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு அணியில் வாய்ப்பு அளித்து உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரின் 3-வது ஆட்டத்தில் டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன் எடுத்து அசத்தினார். இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் டிம் டேவிட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் டிம் டேவிட் இடம்பெற வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்த போது எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள். 15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.

1 More update

Next Story